முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் தமிழ் பழமொழிக்கு மிக அருமையான சக்தி இருக்கிறது. ஏனென்றால் இந்த தத்துவத்திற்கு இணையாக என் அன்றாட வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
முதலாவதாக :- வழக்கமாக நான் அலுவலகத்திற்கு வந்தாயிற்று , அன்று மதியம் இரண்டு மணி அளவில் சென்னை, அடையாரில் இருக்கும் IIT கல்வி நிறுவனத்திற்கு சென்று வியாபார சந்திப்பை முடித்துவிட்டு, கிண்டி நோக்கி கவர்னர் மாளிகை சிக்னலை என்னுடைய மோட்டார் பைக் மூலம் கடக்கும்பொழுது , அதே வழியாக வந்த இன்னொரு இரண்டு சக்கர ஓட்டுனர் என்னை கடந்து வந்து என் பைக்கின் முன்னே என்னை இடைமறித்தார் , நானும் என்னடா இது, என்ன வில்லங்கம்! என்று வண்டியை நிறுத்தி என்னங்க என்று கேட்டேன் .
உடனே அவர் ஒரு சிறிய கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார் , சார் …