Nam Kaadhal

—————————————————-

உன்னிடம் சொல்ல நான் தேடி வைத்திருந்த வார்த்தைகளெல்லாம்

உன்னைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொண்டனவோ

பேச தெரியாத குழந்தையாய் நான் ….. !

—————————————————-

உறங்கும் ஊருக்கு மத்தியில்

உறங்காமல் நிலவும் நானும்உன்நினைவுகளில் மூழ்கி நானும்

எனக்கு துணையாய் அந்த நிலவும்.

—————————————————-

உன்னருகில் நான் இல்லை என்றாலும்

உனக்குத் துணையாய் இருக்கும் என் நினைவுகள் எனச் சென்றாய்…. !

இப்போது தான் புரிகிறது எனக்கு,

உன் நிஜங்கள் அல்ல,

நினைவுகள் தான் எனக்கு நிரந்தரமென்று ….. !

—————————————————-

திரும்பும் திசையெங்கும் உன் முகம்

கேட்கும் இசையனைத்தும் உன் குரலும்

நகரும் நிமிடமெல்லாம் உன் நினைவைத் தரும் இந்த தனிமை

ஒருபோதும் கொடுமையாய் இராது

என்றென்றும் தனிமை இனிமையே…. !

—————————————————-

என் கவிதைகளை

உன் நினைவின்றியும்

உன்னைத் சீண்டாமலும் தான் எழுத முயல்கிறேன்,..

உன் நினைவின்றி நானும் இல்லை…,

உன்னை சீண்டாத என் கவிதைகள் பிறக்கவே மறுக்கின்றனவே…,

யாசிக்கும் என் கவிதைகளுக்காகவேனும்

யோசிக்காமல் நான்சிறிது சீண்டிக் கொள்ளட்டுமா உன்னை….!

—————————————————-

என்னை முழுதாய் புரிந்தவன்

வாழ்க்கைச் சூழலில் பிரியமின்றி பிரிந்தவன்

தொலைய மறுத்து என்னுள் நீங்காத

நினைவாய் தங்கிவிட்டான்

என்னை பைத்தியமாய் பிதற்றச் செய்ய….!

—————————————————-

கனவிலாவது வருவாய் என உன்னை எதிர்ப்பார்த்து காத்திருந்து……..

இன்றும் ஏமாற்றத்துடன் தள்ளினேன் இரவை !

விடுதலையானது இரவு,

உறங்க மறந்துவிட்டேனோ என பெருமூச்சுடன் நான்……

நாளைய இரவை எதிர்ப்பார்த்து……..!

—————————————————-

நீ என் கவனங்களை களவாடிய கள்வன் மட்டுமல்ல !

சத்தமின்றி என் சிந்தையில் வாழும் ஸ்நேஹன் மட்டுமல்ல !

உன் நினைவுகளை குழைத்து

எனக்குள் கருக் கொண்டிருந்த கவிதையை உருக் கொண்டு வரச் செய்த சிற்பியும் தான் !

—————————————————-

———————————————————–
காத்திருப்பது  கண்கள் மட்டுமல்ல, என் இதயமும்தான்.
கண்கள் தூக்கத்திற்க்காகநீ  கனவில் வருவாய் என
இதயம் உன் அன்பிற்காக, நீ வாசலில் வருவாய் என

————————————————————
கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன்
கடல் அலை வந்து எடுத்து சென்றது,
அழகான முத்துக்கள் எனக்கே சொந்தமென்று.
———————————————————–

என்கண்ணிருக்குத்தான்எத்தனைவெட்கம்
அவர் விலகி சென்றபின்தான் வெளியில் எட்டிப்பார்கின்றது.

———————————————————–

நீ, நான், நட்பு முவரும் ஓடிக்கொண்டு இருந்தேம்
உனக்காக நானும், எனக்காக நயும்,
விட்டுக் கொடுத்து ஓடும் போதுநட்பு
நம்மை  வென்று விட்டது

———————————-

மேல்இருக்கும்இமைகளுக்குஎவ்வளவுதான்பொறாமை,
கண்  சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப்பட்டால்.
பொறாமை உன்னைப் பார்க்கும் விழி மீதா இல்லை உன்மீதா.

——————————————————————

இந்தஉணர்வுகள்தூசியாலும்,
காற்றாலும் கலங்கப்படாத.

மனதினைகண்ணாடிப்போன்று
பிறதிபலிக்கும் பெருங்கடல்.
—————————————————————-
நான் உன்னை பார்க்கும் பொழுது
தடுமாறக்குடாது என்பதிற்காக ,
இதயத்தை இரும்பாக்கி நின்றேன் .

அதனால்தான்என்னவோ ,
ஈர்த்துவிட்டது உன் காந்த விழிகள்
—————————————————————

கண்ணில்பதிந்தஉறவுகள்மறையலாம்
ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள்
என்றும் மறைவதில்லை,
உன் உறவைப்போல!

—————————————-
நினைவை கொடுத்த ஆண்டவன்,
நிம்மதியை கொடுக்க மறந்து விட்டான்!
அன்பை கொடுத்த ஆண்டவன்
ஏன் அன்பானவர்களை அருகில் வைக்க மறந்து விட்டான்.

—————————————–
உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்…!

உன்கருவட்டவிழிகளுக்குநடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது…!

உன்உதட்டுசிவப்பில்ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது…!

உன்கூந்தல்முடிகளுக்குபின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை…!

உன்கன்னக்குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்…!

உன்வார்த்தைகளின்இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்…!

உன்கன்னம்கிள்ளிவிட்டஎன்விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்…!

Comments