மார்ச் மாதத்தில் வெளியிட்ட ஐ-போனுக்கான ஆத்திச்சூடி உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது, பதிவிறக்கம் செய்த பலர் ஆயிரக்கணக்கான கருத்துக்களையும், ஆத்திசூடியை விளக்க உரையுடன் அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தனர். அனைவருக்கும் நான் அளித்த முதல் பதில் நிச்சயம் விளக்க உரை அளிக்க முயற்சி செய்வேன், தமிழ் ஆர்வலர்கள் யாரேனும் விளக்கத்தை இலவசமாக பதிவு செய்ய அனுமதி அளிப்பார்கள் எனில்?. இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த திரு.ஸ்ரீதர் கோபாலன் என்பவர் உங்கள் ஐ-போனுக்கான ஆத்திச்சூடி பதிவு அருமையாக உள்ளது, அதற்கான விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று வினவ, நான் அவரிடம் நீங்களும் ஒரு தன்னார்வலராக இணைந்தால் நிச்சயம் முடியும் என்று. தற்பொழுது அமெரிக்காவில் பணிபுரியும் கோயம்பத்துரைச் சேர்ந்த திரு.ரெக்ஸ் அருள் அவர்கள் அவருடைய வலைப்பதிவில் ஆங்கிலத்தில் விளக்கம் அளித்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டு, திரு ஸ்ரீதர் கோபாலன், திரு ரெக்ஸ் அருள் இவர்கள் இருவர் உதவியுடன் விளக்க உரையை அளிக்க இயலும் என்று திரு ரெக்ஸ் அருள் அவர்களுக்கு முன்மடல் வைத்தபொழுது, அவர் மிக்க சந்தோஷத்துடன் இதில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்து, ஒரு மாதம் இடைகால அவகாசம் தாருங்கள் விரைவில் ஆங்கிலத்தில் விளக்க உரை அளித்து விடுகிறேன் என, விறுவிறுப்பான தன அலுவல் பணிகளுக்கு இடையிலும் ஆங்கிலத்தில் விளக்க உரை எழுதி குறித்த நேரத்தில் அனுப்பிவிட்டார்.
அதை அப்படியே திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு அனுப்ப, இருபது நாட்களுக்கு பிறகும் எந்த பதிலும் மடல் வராத நிலையில், என் கணிப்பில் திரு ஸ்ரீதர் அவர்கள் உலக சுற்று பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்து இருந்தார் எனவே மின் மடல்களை பார்க்க இயலவில்லை என்று நினைத்து , திரு ரெக்ஸ் அவர்களுக்கு பதில் அளிக்க கடமை பட்டவனாக, அவருடைய உழைப்பு வீண் போகக் கூடாது என்று நானே அந்த ஆங்கில விளக்கத்தை தமிழில் மாற்ற முயற்சி செய்யலாம் என்று முடிவுக்கு வந்து விளக்கத்தை மொழி பெயர்ப்பு செய்ய முயற்சிக்க!
திரு ரெக்ஸ் அவர்கள் ஆங்கில வல்லுநர் போலும், கடினமான நிறைய வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார், இருப்பினும் தமிழ் அகராதிகளின் உதவியுடன், ஆதிதிசூடிக்கான விளக்கத்தை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றாற்போல் தமிழில் விளக்கம் அளித்துள்ளேன். இதை என்னுடன் ரெயிலில் பயணம் செய்யும் திரு.மனோகரன் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அவர்களின் உதவியுடனும், என் அலுவலகத்தில் பணிபுரியும் திரு. லோகநாதன் அவர்களின் உதவியுடன் விளக்க மற்றும் எழுத்துப் பிழைகளை சரிபார்த்து, புதிய பதிவினை iTunes Store-க்கு சமர்பித்த 4 நாட்களில், புதிய பதிவு நேற்றைய இரவில் இருந்து இலவச விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தொடுப்பு
முக்கியமாக தமிழ் விளக்க உரை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்பதனால் எதாவது பின்னுட்ட கருத்துக்கள் இருப்பின், மடலில் பதிவு செய்ய்மாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி பதிவின் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை என்பதை இந்த வலைப்பதிவின் மூலம் பதிவு செய்கிறேன்.
வளர்க தமிழ், வாழ்க தமிழ்!
dear sir,
i am looking for our anciant stories like ponniyin selvan, sivagamiyin sapatham..etc in itune in tamil format..is it possible to get??? !!!
Hello Kumar,
Ponniyin selvan Possible as a PDF book. To do app, need to spend lot of time.
There is an Audio Podcast available in iTunes Check.
Best wishes
Devarajan G
thank u for your kind response on this
welcome kumar!
hi,,
good work… same way i did aathichuti app in android with English and Tamil explain .
like is blllow ::
https://play.google.com/store/apps/details?id=com.muthu.tamil&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5tdXRodS50YW1pbCJd
if u need explan data inform me i will ready give you thanks….
Good Job Kalimuthu!. Good luck on your endeavors.
Hi,as a delayed responder hope im putting a delayed comment,i downloaded ur aathichudi app in my iphone 2 days back and its really awesome and helpful for my son.Thank you for providing such a wonderful app.
Mangai,
Thank you very much for downloading the app and feedback.
யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக
🙂