Aathichoodi in iPhone

 புதிய பதிவு நேற்றைய இரவில் இருந்து  இலவச விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தொடுப்பு Version 0.8

ஐ-போனில் தமிழ் வரவில்லை, வேலை செய்யவில்லை என்கிற பல ஏமாற்ற கருத்துகளுக்கு இடையே,  தொழில்நுட்பம் என்கிற அதே சக்தியின் உதவியுடன், கட்டாயமாக மொழியை நம் வழி ஆக்கிக்கொள்ளலாம் என்கிற தெளிவுடன், ஒளவை பாட்டியின் நூல்களை, ஐ-போன் மென்பொருளாக தயாரித்து வெளியிட்டு இருக்கிறேன். வியாபாரம், பணம் என்கிற ஆசை இருந்தும் இந்த பதிவை இலவசமாக பதிவிறக்கம் செய்ய வகை செய்திருக்கிறேன். தொடுப்பு
இடம் பெற்றுள்ள ஒளவை நூல்கள்  :-    ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த றம்  செய விரும்பு, ஆறுவது சினம் என்கிற பழமொழிகளை இன்று நான் என் கைபேசியில் காணும்பொழுது எனக்கே ஒரு உணர்வுபூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பதிவை, ஐ-போன், ஐ-பேட் டச், என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வைத்திருக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் படித்து மகிழ்ச்சி அடைவீர் என நம்புகிறேன்.

தமிழ் அன்புடன்!
கோ.தேவராஜன்
அரக்கோணம், இந்தியா.

Comments

  1. வணக்கம் அண்ணா, உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி. மேலும் பல பதிவுகளை அறிமுகப்படுத்தவும்.